பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டாக்டர். எ.எல். நவராஜ் செல்லையா



'நான் யோசித்துப் பார்த்தேன். எனக்கு அந்தத் தகுதியில்லை” என்று பலர் எழுந்து கூறாவிட்டாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட விதம், அப்படி கூறாமல் கூறிக் கொண்டிருந்தது.

'யாருமே போக முடியாது சார்' என்று ஒரு மாணவன் துணிச்சலாகக் கூறிவிட்டு, எழுந்த சுவடு தெரியாமல் உட்கார்ந்து விட்டான்.

ஆசிரியர் முகத்தில் மாற்றங்கள் பல தோன்றி மறைந்தன.

நான் போனால் போவேன் சார்' என்று ஒரு சத்தம் கேட்டு அடங்கியது. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

சத்தம் போட்டு சொல்லிய மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன். அந்த இடத்தை விட்டு ஓடிக் கொண்டிருந் தான். மரத்தடி வகுப்பில் உட்காராத மாணவன் அவன். வேலி ஓரத்தில் நின்று மாட்டுக்குக் கண்ணையும், வகுப்புக்குக் காதையும் கொடுத்துக் கொண்டிருந்தவன் அவன்.

ஆசிரியர் கனைத்தார். மாணவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அதோ ஓடுகிறானே! அவன் சொன்ன பதிலைக் கேட்டீர்களா என்றார். "ஆமாம்” என்பதற்கு பதிலாக, சிரிக்கத் தொடங்கினார்கள் அவர்கள்.

நான் சிரிப்பதற்காக உங்களிடம் சொல்லவில்லை, சிந்திப்பதற்காகச் சொன்னேன், மோட்சத்திற்குப் போக வேண்டும் என்றால் ஊசிமுனையில் ஒட்டகம் நுழைவது போல்தான். ஆனால் நல்ல குணங்கள் உள்ளவர்கள் தான் அங்கே போக முடியும் என்பது வழி வழி வரும் நம்பிக்கை."