பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ژی 558কলা சுற்றுல்: - 15 அந்த மாடு மேய்க்கும் சிறுவன் கூறினானே கேட்டீர்களா: நான் போனால் போவேன்' என்று, அதுதான் உண்மை. நான் எனும் அகந்தை போனால், நானும் போவேன் என்றுதான் அந்தச் சிறுவன் கூறினான். - நான் என்கிற திமிர், மமதை, கர்வம், அகங்காரம், ஆணவம் ஒருவரிடம் இருந்து போனால்தான், அன்பு, அடக்கம், அமைதி, அறிவு, பற்று, பாசம், பண்பு, பணிவு, எல்லாம் வரும். அவர்களே பிறருக்கு உதவும் பண்பாளர் களாக, அனைவரையும் மதிக்கும் அன்பாளர்களாக வாழ்வார்கள் என்று கூறிமுடித்தார் ஆசிரியர். வாழ்க்கையில் மேன்மை பெற, வீடு பெற, நான் எனும் குறை போனால்தான் முடியும். அதே நிலையில்தான் விளையாட்டு உலகிலும், நான் என்ற திமிர் இல்லாத ஆட்டக்காரர்களிடம் தான். அத்தனை திறமைகளும் ஜொலிக்கும். முன்னேற்றம் தரும். நாம் எனற ஒறறுமை உனா வை வளாதது உறவை புதுப்பிக்கும். பலப்படுத்தும். நான் என்று திரிபவர்கள் நாளாக நாளாக பிறரால் பழிக்கப்படுகின்றார்கள். அவரது திறமையும், பெருமையும், புழுதியில் விழுந்து வெண்ணெயாகப் போகிறது. ஆகவே 'நான் என்பதை மாற்றுவோம். 'நாம் என்று கூறுவோம். ஒன்று சேருவோம் செழித்து வளர்வோம். வாழ்வோம். இதுதான் முன்னேறுவதற்கான உண்மையான வழியாகும்.