பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




3. காலமும் கோலமும்

இது ஒரு மாதிரியான கதை.

கற்பனையின் சிகரத்திற்கே இது போகிறது என்றாலும், இது நம் வாழ்க்கையின் அன்றாட நிலையை சுட்டிக் காட்டி செல்லுவதால் தான், நம் சுற்றுலாவில் இதனை இணைத்திருக்கிறோம்.

கடவுள் மனிதரைப் படைத்து, மற்ற விலங்கினங்களையும் படைத்து, அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும். என்று வயது உச்ச வரம்புகட்ட முயன்றாராம். அதற்காக, மனிதர் மற்றும் பல விலங்குகளையும் வரவழைத்தாராம்.

மனிதன், விலங்கினத்தில் மாடு, மற்றும் குரங்கு, பறவையினத்தில் ஆந்தை என்பதாக அங்கே ஆர்வத்துடன் வந்திருந்தார்கள்.

எல்லோருக்கும் உச்ச வயது வரம்பு 20 ஆண்டுகள் தான் தந்திருக்கிறேன் என்றாராம் கடவுள். மற்றவைகள் தலையாட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தன. மனிதன் அதனை ஒப்புகொள்வானோ!

அவன் திருப்தியடையவில்லை. அதனால் முகத்தை அஷட கோணலாக்கித் தொங்கப் போட்ட வாறு, தன் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டான்.

20 ஆண்டுகள் எனக்கு போதாது என்றான்.

அவனை பரிதாபமாகப் பார்த்தார் இறைவன். இன்பமாக கவலையில் லாமல் சுகமாக வாழ