பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சுற்றுலா

17


 20ஆண்டுகள் போதாதா என்று கேட்டு, அவன் மனதை மாற்றப் பார்த்தார், எதற்கும் அடங்காத மனிதன் மசியவில்லை.

அவனைப் பார்த்த மாட்டுக்கு என்னவோ போல் இருந்தது. என்னுடைய 20 வயதையும் நீ எடுத்துக் கொள்' என்றது. இறைவன் தலையசைத்து சம்மதித்தார்.

40 ஆண்டுகள் வாழலாம் என்றாலும் அந்த மனிதன் நெஞ்சத்தை அது மகிழ்விக்கவில்லை. மீண்டும் சோகரசமானான்.

அவனைத் திருப்தி படுத்திட முடியாதா என்ற நிலையில், குரங்கு அவனைப் பார்த்து, 'என்னுடைய வயதையும் நீயே எடுத்துக் கொள்ளேன் என்றது.

'ம்' என்றான். ஏற்றுக் கொண்டது மனம், என்றாலும் 60 வயதுதானே! என்பது போல அவன் ஆசை சவ்வு மிட்டாய்போல இழுத்துக் கொண்டு போனது.


ஆந்தை பார்த்தது, அது மட்டும் விதிவிலக்கா!

தானும் தன் 20 ஆண்டுகளைத் தருவதாக சம்மதித்தது. 80 ஆண்டு காலம் இனிதாக இரு என்றன. பிறகு வாழ்த்திச் சென்றன.

ஆனால் பாருங்கள்! மனிதன் தன் 20 வயது காலம் வரை இளமையோடு மட்டும் வாழவில்லை. இனிமையாக வாழ்கிறான். கவலையும் கலக்கமும், குடும்பச் சுமையும், வாழ்க்கையும் என்ற எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமலே வாழ்கிறான்