பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


 அதற்குப் பிறகுதான் அவனது கடமை தொடங்கு கிறது. குடும்பம் ஏற்படுகிறது. சுமை ஏறுகிறது. சுமை மாறுகிறது. குடும்பத்தைக் காக்கமாடாக உழைக்கிறான். பிழைக்கிறான். தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி, இரவு பகலாக உழைக்கிறான். -

நாற்பதும் கழிகிறது, நாலாவித பிரச்சினைகள் அவனை, அல்லோலகல் லோலப் படுத்துகின்றன. உடலிலே நலிவு. உள்ளத்திலே துன்பத்தின் தினவு. அங்கும்மிங்கும் அலைகிறான். குரங்கு மனம் படைத்த வனாகக் குதிக்கிறான். குதர்க்கமாகப் பேசுகிறான். குறுக்கு வழிகளை கையாளுகிறான். குரங்கின் கையிலே கிடைத்த மலர் மாலையாக அவனது வாழ்க்கை முறை அமைகிறது. குரங்கு வாழ்க்கைதானே அது!

அறுபதும் வருகிறது. உடலில் ஆண்மையும் ஆளுமையும் குறைகிறது. வாழ்வின் ஓட்டமும் ஆட்டமும் அடங்குகிறது. வீடு, நாடு முழுவதும் வளையம் வந்த உடல் ஒரு மூலையைத் தேடி அடைகிறது. இல்லை. அவனது வாரிசுகள் ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகின்றனர்.

பொந்திலே ஆந்தை அமர்ந்து விழிப்பதுபோல, அடங்கி ஒடுங்கி இருப்பதுபோல அவனது காலம் கழிகிறது.

மனிதனாக இருக்க வைத்தது 20. மாடாக உழைக்க வைத்தது 40. குரங்காகக் குதிக்க வைத்தது 60. ஆந்தையாக அடங்கி விட்டது 80.