பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 19 மனிதனாக இருக்கும் பொழுது. அதாவது இளைஞனாக இருக்கும் பொழுதே நல்ல வழிகளில், நல்ல முறைகளில், வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், மாடும், குரங்கும், ஆந்தையும் உடலில் வந்துபோகுமே தவிர, வதைத்துவிடாது. அதனால்தான், இளமையில் உடலைக்காப்பவர்கள். முதுமை வந்தாலும் இது போன்ற துயரங்களை அடைவதில்லை என்பார்கள். இந்தக் கதை கற்பனைக்கும் அப்பாற்பட்டது தான் என்றாலும், மனித வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் அமைந்திருக்கிறது. வாழ்க்கை முறையை நன்கு அனுபவித்த யாரோ ஒருவர் இட்டுக் கட்டிய கதையாகக்கூட இருக்கலாம். கதையை மறப்போம். கருத்தை நினைப்போம். இளமையை நினைப்போம். வலிமையை வளர்ப்போம். வாழ்வை முயற்சியுடன் இணைப்போம். கடமையுடன் வாழ்ந்தே காலத்தை சுவைப்போம். இளமையில் உடலைக் காப்பது அறிவுள்ளோர் செயல். இளமையில் உடலை வதைப்பது முட்டாளின் செயல். நாம் அறிவுள்ளவர்களாக வாழ்வோமே!