பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 23 கொள். இந்த வீட்டில் இனிமேல் நீ வேலைசெய்ய வேண்டாம்” என்றார். 'ஐயா! மன்னித்து விடுங்கள், ஆஸ்பத்திரியில் உள்ள என் மகளின் நோய் வேதனையை சகிக்க முடியாமல் திருடி விட்டேன், இனி மேல் இப்படி செய்யமாட்டேன். என்றான். "இல்லை. உன் மனம் எனக்குத் தெரியும் நீ இருந்து மதிய உணவு விருந்து சாப்பிட்டுவிட்டுப் போ' என்று அவனை உள்ளே போகச் சொன்னர், அவனும் உள்ளே சென்றான். வீட்டுப் பெண்கள் பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார்கள் வேலவனை 'திருடிய பாவிக்குப் பணமும் சோறுமா!' இப்படி பலப்பல கேள்விகள். - இத்தனை நாளாக இந்த 2000 ரூபாயும், நானும் உங்கள் மனதிலே மகிழ்ச்சியை அளிக்க முடிய + கூr -ே கூ க் o வில்லையே! அவன் வந்ததால்தானே உங்களுக்கு நிம்மதி வந்தது! அதனாலதான அவனுககு 2 COO ரூபாய்க்கு மேலே நம் வீட்டில் இருந்தாலும், அவ்வளவை யும் தந்து இருப்பேன். ஏனெனில் இந்த வீட்டிலே சந்தோஷம் இப்பொழுதுதானே வந்திருக்கிறது: அவர்கள் மனம் உணரத் தொடங்கியது. 'பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. மனதிலே நிம்மதி, கவலை இல்லாத சந்தோசஷம். இதற்காக, எத்தனை ரூபாயை வேண்டுமானாலும், தானமாகத் தரலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் அவனை மன்னிக்கலாம்' என்றார் வேலவன். உண்மைதானே! பணமும் பதவியும், அதிகாரமும் மட்டும் நிம்மதியைத் தந்துவிடாது. பண்பும், இரக்கமும், பாசமும் தான் நிம்மதியைத் தரும்.