பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 25 பவானியின் வழக்கெல்லாம் கல்யாணராமன் மீதுதான். தன் கணவனைப் பெற்ற பெருமகனாயிற்றே. வயதானவராயிற் றே, அரண்மனை போல வீட்டை சம்பாதித்துக் கொடுத்தவராயிற்றே; தன் ஆருயிர் கணவனை இந்த அளவுக்குப் புகழ் பெற்ற வக்கீலாக ஆக்கியிருக்கிறாரே என்றெல்லாம் பவானி பார்க்கவில்லை; பார்ப்பதில்லை, மதிப்பை ஒரு மயிரிழை கூடத் தருவதில்லை. மாமனாரை வீட்டை விட்டு விரட்டினால்தான், தான் மனம் போல் வாழமுடியும் என்ற முரட்டுத் தனமான முடிவில் இருந்தாள் பவானி. அதற்காகத் தினமும் மாமனாரைத் திட்டுவாள், உணவு உண்ணும் நேரத்தில் உள்ளம் வருந்தும் படி பேசுவாள், ஏசுவாள், எந்தெந்த வகையில் அவரை அவமானப்படுத்த முடியுமோ, அதையெல்லாம் ஆனந்தமாக ஆரவாரத்துடன் செய்வாள். மாலை நேரத்தில் தன் கணவன் வீட்டிற்கு வந்ததும் வராததுமாக, வாசலிலேயே நின்று, தன் வம் பு புராணத்தை ஆரம்பித்து, வீட்டுப் படுக்கையறை வரை சென்று வெற்றிகரமாக முடித்துக் கொள்வாள். கட்டிய மனைவியின் கண்ணிர் அருவியையும், கரைகாணா துன்பத்தையும் காணச் சகிக்காமல் வில் லிலிருந்து புறப்பட்ட அம்பு போல, வேகமாக தந்தையிடம் போவான் பரசுராமன். - 'உங்களால் தினமும் இதே தொல்லைதான். வயதாகி விட்டால் ஒரு மூலையில் போய் முடங்கிக் கிடக்கக் கூடாதா! ஏன் இப்படி வீட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள்? என்ற பாணியில் முன்பெல்லாம்