பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பேச ஆரம்பித்தவன், இப்பொழுதெல்லாம் தந்தை யென்றும் பார்ப்பதில்லை. தெருவில் போகும் தெரியாத ஒருவனை, ஒரு பிச்சைக் காரனை விரட்டுவது போல, திட்டுவது போன்ற நிலையில் திட்டவும் தொடங்கி விட்டான்." மருமகளுடன் மகனும் இரண்டறக் கலந்து விட்டான் அப்படி அவள் தன் மகன் மனதை மாற்றிவிட்டாள். இனிமேல் நான் எப்படி எடுத்துச் சொன்னாலும் அவன் காதில் ஏறாது, என்று தீர்மானித்துக் கொண்ட கல்யாணராமனும் தன் தலைவிதியை நினைத்துக் கொண்டு தன் அறைக்குப் போவதும் அழுவதும் வழக்கமான காரியமாகி விட்டது. அன்று வேலைக்காரன் ஒருவன் வேலைக்கு வரவில்லை அவனது வேலையைச் செய்யச் சொல்லி தன் மாமனாரை ஏவினாள் பவானி. ஆனால் அவரது தன்மானம், சுய கெளரவம் அதற்கு இடந்தரவில்லை. மறுத்துப் பேசி விட்டார். பவானிக்கும் இவருக்கும் கொஞ்சம் வாய்ச்சண்டை. வழக்கத்திற்கு மாறாக, முற்றிவிட்டது. இதனால் இரண்டில் ஒன்று பார்ப்பதாகவும், இது தன் மானப் பிரச்சினை என்பதாகவும் பவானி கூறி விட்டாள். அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டாள். அன்று மாலை பரசுராமன் கோர்ட்டிலிருந்து வீடு திரும்பினான். வீட்டின் ஒரு மூலையில் இருந்து கொண்டு இன்று என்ன நடக்கப் போகிறதோ, என்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் கல்யாணராமன். வீட்டு வாசலிலே நின்று கொண்டிருந்த பவானி, தன் கணவனைப் பார்த்ததும் புலம் பத் தொடங்கி விட்டாள். தன் மானமே பறிபோய் விட்டது என்றாள்.