பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 27 தன்னைத் தன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிடச் சொன்னாள். வீட்டில் ஏற்கனவே தயாராகக் கட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானாள். - மனைவியைத் தடுத்தார் பரசுராமன். நீ ஏன் போக வேண்டும்? அந்தக் கிழக்கோட்டானை விரட்டுகிறேன் பார்!. அது இங்கே இருந்து கொண்டு உயிரை வாங்குகிறது. செத்துத் தொலையவும் மாட்டேன் என்கிறது என்று கூறினான். அல்ல சீறினான். விடுவிடென்று வேகமாக உள்ளே நுழைந்தான். பெற்ற தந்தையின் கையைப் பிடித்து இழுத்தான். பிறகு முன்னே இழுத்துத் தள்ளி, அவர் கழுத்தில் கையை வைத்துத் தடதடவென்று தள்ளிக் கொண்டே வாசலை நோக்கிப் போனான். முடியாது என்பது போல கல்யாணராமன் பின் வாங்கினார். இளமையின் முன்னே முதுமை தள்ளாடியது. தள்ளாடித் தள்ளாடி வாசல்வரை நடந்து பேசாமல் நடந்தார் கல்யாணராமன். அவரால் மகனின் வேகத்திற்கு நடக்க முடியவில்லை. வாசல் வரை வந்தாகி விட்டது. இப்போது கல்யாணராமன் முரண்டுபிடிக்கத் தொடங்கினார். குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும் அவர் நின்றார். மகனைப் பார்த்துப் பேசத்தொடங்கினார். கழுத்திலிருந்து கையை எடுத்து விடப்பா அருமை மகனே! இனிமேல் நானே வெளியே போய் விடுகிறேன். இங்கே இனிமேல் நான் தங்கவே மாட்டேன். உன் முகத்தை பார்க்கவே மாட்டேன்’ என்று அழுது கொண்டே கூறினார். பரசுராமனுக்கோ ஆச்சரியம். தன் அப்பா அழுவதை இன்றுதான் பார்க்கிறான் அவன். மகனின் அதிர்ச்சியைக் கண்ட கல்யாணராமன் தொடர்ந்து அழுது கொண்டே பேசினார்.