பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'என் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்று தந்தையின் கழுத்தைப் பிடித்து, இந்த இடம் வரை தள்ளிக் கொண்டு வந்த பாவிநான். அந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக நீ செய்து விட்டாய். என் தந்தை இந்த இடம் வந்ததும் நான் தள்ளவில்லை. எனக்கு சிரமம் கொடுக்காமல் இந்த இடம் வந்ததும் அவராகவே வீட்டைவிட்டுப் போய்விட்டார். நானும் அதுபோலவே போய் விடுகிறேன் என்னைத் தள்ளி சிரமப்படவேண்டாம் வரட்டுமா மகனே என்றார். சிலையாக நின்றனர் பரசுராமனும் பவானியும். கல்யாணராமன் தன் தந்தையான ஆனந்தராமனை வாசல் வரை கழுத்தைப் பிடித்து அன்று தள்ளினார். முற்பகல் செய்ததே பிற்பகலில் அவருக்கு விளைந்தது. பரசுராமனுக்கு எந்த ராமன் வரப்போகிறானோ? இதுதான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கை என்று வெளியேறிய கல்யாணராமனின் மனசாட்சி துடித்து கொண்டிருந்தது. விளையாட்டிலும் இப்படித்தான். பிறரது முன்னேற்றத்தை இன்று பதவியில் இருந்து கொண்டு தடுப்பவர்கள், நாளைக்கு அவருக்கு முன்னேற்றம் என்று வரும்போது ஒருவர் வந்து தடுக்காமலா இருப்பார்? உதவி எப்படி பிறரால் எதிர்பார்க்காமல் வந்து சேருமோ, அது போலவே துரோகத்திற்குப் பதிலாக துரோகமும் வந்து ஒருநாள் சேரும்! பிறரைக் கெடுத்தவர்கள் கெட்ட கதைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை மறப்போம். நல்லது செய்து நாம் மகிழலாமே!