பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 29 6. காரணமும் காரியமும் சுற்றுலா செல்கின்ற கும்பல் ஒன்று, சுவையான தின் பண்டங்களையும் சுமந்து செல்கின்றது. எங்கேயாவது ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்து உண்டு, உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று விரும்பியவாறு, அது ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கின்றது. நெடு நெடுவென்று வளர்ந்த ஒரு மரம். நிழல் குடை போல் தலை விரித்து கிளையசைத்து நிற்கின்ற மரம். அவர்களை ஆவலுடன் நிழல் பாய் விரித்து அழைத்தது. எல்லோரும் சென்று அமர்ந்தனர். அருந்தினர். அறுசுவை உண்டியை ஆரவாரத்துடன் அங்கே உண்டு மகிழ்ந்தனர். வயிறு நிறைந்ததும் வாய்கள் நிமிர்ந்து கொண்டன கொட்டாவி விட்டு கால்களை நீட்டி முடக்கிக்கொண்ட உருவங்கள் சில. நெட்ட நெடிய மரத்தைப் பார்த்ததும் ஏதாவது பேச வேண்டுமே என்று யோசித்து, ஒன்றும், வராமல் ஒதுங்கிக் கொண்ட மனிதர்கள் மேலும் சிலர். மற்றவர்கள் தங்கள் விமரிசனத்தைத் தொடங்கினர். அழகான மரம். இந்த இடத்திற்கு எழிலைத் தருகின்ற மரம் என்று இயற்கையழகைப் போற்றி மகிழ்ந்தார் ஒரு முதியவர். நீண்ட கிளைகள் உள்ளன. இவற்றைப் பலகையாக அறுத்தால் வீடு கட்ட உதவும், மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் என்று காரிய வாதி ஒருவர். அதனைக் கணக்கெடுத்துப் பேசினார்.