பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இன்னும் கொஞ்சம் நாள் போனால், நல்ல கனிகளைக் கொடுக்கும். பறவைகளுக்கு மட்டுமல்ல, பசித்து வரும் மக்களுக்கும் நன்கு பயனைக் கொடுக்கும் என்று பயன் தெரிந்த புத்திசாளி ஒருவர் பேசினார். என்ன இருந்தாலும் இதனை வெட்டி வீழ்த்தினால், இரண்டு டன் விறகு கிடைக்கும். நிம்மதியாக இரண்டு மாதங்களாவது அடுப்பெரிக்கலாம் என்றார் கட்டைத் தொட்டி வியாபாரி ஒருவர். இன்னும் ஒருவர், காரண காரியமில்லாமலேயே, 'இந்த மரம் இந்த இடத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது. இதனால் ஆபத்துதான் என்றுஅர்த்தம்கெட்டமுறையில் அடுக்கிக் கொண்டே போனார். ஆக, இருந்தது ஒரு மரம். அண்ட இடங்கொடுத்து இருக்க நிழல் கொடுத்து உதவிய அந்த பழமரத்தைத்தான். பலர் சேர்ந்து கொண்டு தங்கள் தங்கள் அபிப் பிராயங்களை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பழமரத்தின் நிலையில்தான் உடற் கல்வியும் விளையாட்டும் நம் நாட்டில் இருக்கின்றன. பயன் தெரிந்தவர்கள் அதை பாராட்டுகிறார்கள். அதன் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள். பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். பேணிக்காக்க பலவாற்றானும் பேருதவியும் புரிகின்றார்கள். வேறு சிலரோ யானை பார்த்த குருடர்களைப் போல, விளையாட்டின் பெருமையை உணராது. வாழ்க்கையை யும் வீணாக்கிக் கொள்கின்றார்கள்.