பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 31 பலராக சுற்றுலா வந்த கும் பல் போலத்தான். இவ்வுலக வாழ்க்கையும் மக்களும் இருக்கின்றார்கள். இனிய கனிகளையும், குளிர்ந்த நிழலையும் கொடுக்கும் மரம் போல, விளையாட்டும், உடற் கல்வியும் விளங்குகின்றன. விளையாட்டை வெறுக்கக் கற்றுக் கொண்டவர்கள் அறியாமையால் செய்கின்றார்கள். அதை வீழ்த்த முயல்பவர்கள் தான் இந்த சமுதாயத்தின் விரோதிகள் ஆவார்கள். தினைத்துணை பயன் தந்தாலும் பனைத் துணையாகவே கருதிப் போற்றுகின்ற பண்பு உள்ளம், என்றைக்கு நம்மவர்க்கு வருகின்றதோ, அன்று தான் சமுதாயம் சக்தியுள்ளதாக விளங்கும்! தமிழகத்தின் புகழ் தரணியெல்லாம் நிலைக்கும்!