பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 3 2 7. அவசரமும் அவசியமும் தொழில்துறை அதிபர்களில் அவர் தல்ையானவர். அவர் விரலசைந்தால்கூட, அது வியாபார விஷயமாகத் தான் இருக்கும், சிரிக்கும் என்று வியாபாரிகளாலே போற்றப்படுபவர். எந்த நேரமும் பிசியாக இருப்பவர். பார்ப்பதற்குகூட பத்து நாளைக்கு முன்னதாகவே நேரம் கேட்டுப் பெற வேண்டுமென்ற நிலையிலே வாழ்பவர்.' வைத்தியநாதன் என்ற பெயர் கொண்ட முதலாளி, பல தொழிற்சாலைகளின் உரிமையாளர். அவர் பெயரில் பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் ஓடிக்கொண்டிருக் கின்றன. காலையில் தொடங்கி இரவு வரையிலும் எதையாவது சிந்தனை செய்து கொண்டு, செயலாற்றிக் கொண்டு வாழ்பவர். உடல் அவருக்கு உழைப்பதற்கு உறுதுணையாக இருந்தது. உற்ற சேவகன் போல, அல்லும் பகலும் அலுப்பில்லாமல் உழைத்து வந்தது. அது ஒத்துழைத்துக் கொண்டே வந்ததால், உடலைப் பற்றிய சிந்தனையே அவருக்கு வரவில்லை. வரவேயில்லை. விருப்பம் போல வாழ்ந்தார். விரும்பியதை உண்டார். வேண்டிய காரியங்களை விழித்து இருந்தும் கூட தொடர்ந்தார், மெய்வருத்தம் பாராமல் களைத்திருந் தாலும், கண்துஞ்சாமல், பசியும் நோக்காமல் கருமமே கண்ணாகக் காரிய மாற்றினார். எத்தனை காலம்தான் இப்படி வாழ முடியும்? ஒரு மாதம் கார் ஓடினால், அதைப் பார்க்க, பராமரிக்க, பாதுகாப்பு கொடுக்க எவ்வளவு நினைவுடன் ஆட்களை