பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எவ்வளவோ அழகான இடங்கள். அருமையான பகுதிகளிருக்கும்போது, போயும் போயும் அந்த கல்லறைத் தோட்டத்தைச் சுற்றி நடக்கச் சொல்லுகிறிர் களே டாக்டர். வேடிக்கையாக இருக்கிறதே! ஆமாம்! நீங்கள் தானே ஒய்வே இல்லை யென்கிறீர்கள். தொழிற்சாலைகள் நான் இல்லாவிட்டால் ஓடாது. முன்னேறாது. என்னால் ஓய் வே எடுக்க முடியாது என்று உங்களைப் பற்றிய நினைவில்லாமல் வருமானம், வியாபாரம் என்றே பேசுகின்றீர்கள். 'நான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காதென்று உங்களைப் போல சொன்னவர்கள் எல்லோருமே அங்கேதான் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அப்படி நினைத்ததாலேதான் சீக்கிரம் போய்விட்டார்கள். அவர்களை தினந்தினம் சுற்றிவந்தால் தான் உங்களுக்கும் நல்லதென்று நினைக்கிறேன் எனறாா டாகடா." போகப் போகின்ற வாழ்க்கையை, சதம் என்று எண்ணி, உடலைக் கவனிக்காது, மருந்தும் ஊசியும் துணையாக வைத்து வாழ்ந்துவிடலாம் என்று நினைத்த வைத்திய நாதனுக்கு அப்பொழுதான் சுரீர் என்று உறைத்தது. உடற்பயிற்சியை தினமும் செய்கிறேனே! என்றார் வைத்திய நாதன். உண்மையை புரிந்து கொண்டார் என்று மகிழ்ந்தார் டாக்டர். அந்த மேன்மையை உலகமும் புரிந்து கொண்டால்... அந்தக் காலம் ஒருநாள் வராமலா போகும்! ---