பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறதலான வ னது ஆயுலக 37 8. திமிரும் புதிரும் அப்படி ஒரு பேய் மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. திடீரென்று இருள் சூழ்ந்தது போல, கருமேகங்கள் வானை கவ் விக் கொண்டன. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பிறகு, இடிஇடித்து பெய்யத் தொடங்கிய மழை, சாலைகளை கடல் போலாக்கி விட்டு ஓய்ந்து விட்டது. 'காய்ந்தும் கெடுக்கும், பேய்ந்தும் கெடுக்கும் என்று மழையை சாடி சபித்து முனகிக் கொண்டு போன மக்கள் ஏராளம். வென்னில் முதன்முதலில் குளித்த ஏழையின் முகத்தைப் போல, பன்னீரில் குளித்தது போல மலர்கள் மழை நீரில் சிலிர்த்தவாறு அசைந்து கொண்டிருந்தன. மரங்களோ இலைகளையும் கிளைகளையும் அசைத்து, நீரைத் தூவிக் கொண்டிருந்தன. சாலை யோரத்து மரங்களைப் போல்தான் தோட்டத்துச் செடிகளும். காற்றாடிக் கொண்டிருந்தன. தோட்டங்களிலே மிகவும் பிரபலமான தோட்டம் அது பிரேம் பூங்கா என்று அழைத்து அதனைப் பெருமைப் படுத்தினர். அருமையான புல்தரைகள். அழகழகான செடிகள். வண்ண வண்ண மலர்கள், அவற்றைத் தாங்கும் மண்சட்டிகள், சட்டிகள் நிரம்பத் தண்ணிர் நின்று கொண்டு தளும்பிக் கொண்டிருந்தது. மண்சட்டிகளில் மட்டுமல்ல தண்ணிர், ஆங்காங்கே இருந்த மேடையின் குழிகளிலும் தண்ணிர். கீழே உடைந்து கிடந்த கண்ணாடித் தம்ளரிலும் தண்ணிர்.