பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அததனைச் சுறறுலா 39 அவமானப்படுத்துகிறது இந்த மழை.' என்று தாமரை இலை புலம்பத் தொடங்கியது. 'மழைக்கு அறிவே இல்லை. அதை அனுப்பும் கடவுளிடம் கூறி தண்டனை வாங்கித் தந்தால் தான் அதற்கு புத்தி வரும்” என்று பீங்கான் பாத்திரம் தன் குறைக்குத் தீர்வுகாண முற்பட்டது. - மண் சட்டிக்கோ சிரிப்பாக இருந்தது. சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரிக்கவே, பீங்கானும் தாமரை இலையும் திரும்பிப் பார்த்தன. ஏன் சிரிக்கிறாய்? இனிமேல் சிரித்தால் உன்னை போட்டு உடைத்து விடுவேன்' என்று பீங்கான் பீறிட்டுப் பாய்ந்தது. 'ஒன்றும் இல்லை, ஒரு சந்தேகம். அதை கேட்கலாமா?’ என்றது மண்சட்டி. 'உன் மண் மண்டையில் ஏறாது. இருந்தாலும், கேட்டதற்காக பதில் சொல்கிறேன்' என்றது பீங்கான். 'எல்லா இடத்திலும் வந்து தண்ணிர் தங்குகிறது தேங்குகிறது. என்னிடத்தில் மட்டும் ஏன் வரமாட்டேன் என்கிறது? அதனால்தான் அந்த உருப்படாத மழையைத் திட்டினேன்” என்று கூறியது பீங்கான். மண்சட்டியோதன் தலையில் அடித்துக் கொண்டது. "நான் வாய் திறந்துநிற்கிறேன். அதனால் எனக்குள் மழைத் தண்ணிர் தேங்குகிறது. நீயோ கவிழ்ந்து கிடக்கிறாய். உன்மேல் பட்ட நீர் தெரித்து ஓடி விடுகிறது. கவிழ்ந்த பாத்திரத்தில் எப்படி தண்tைர் நிறையும்?