பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஏந்தி வாங்கிக் கொள்ளத் தெரியாத நீ வாயடிப்பது எப்படி நியாயம்?' என்றது மண்சட்டி. கவிழ்ந்து கிடந்த பீங்கான் பாத்திரத்துக்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது போல நிமிர்ந்து கொண்டது. தன் தவறை உணர்ந்து நன்றி கூறியது. இப்படித்தான் மக்களும் உடற் கல்வியைப் பழிக்கிறார்கள். உடற்கல்வியின் கொள்கையை கேட்டுக் கொள்ள மறுத்துவிட்டு, கேளாக் காதினர்களாக இருந்து விட்டு, உடற் கல்வியால் உதவி எதுவும் இல்லை என்கிறார்கள். உடற்கல்வியை ஏந்திக் கொள்ள முன் வந்தவர்கள் உலகத்தில் உயர்ந்தார்கள். ஏற்றுக்கொள்ள மறந்தவர்கள் எதை எதையோ பேசிவிட்டுப் போய் விட்டார்கள். கவிழ்ந்த பாத்திரம் நிமிர்ந்து உணர்ந்து திரும்பியது போல, ஒரு நாள் நிலைமை மாறலாம். வான் மழை போல உடற்கல்வி உலகுக்கு உதவலாம். என்ற நம்பிக்கையில் நமது பணி தொடர்கிறது. தொடரட்டும்.