பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர். எண். நவராஜ் செல்லையா அடுத்து என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். தன் அறையில் இருந்த அலமாரிகள் நான்கினையும் ஒவ்வொன்றாகத் திறக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்தனை அலமாரிகளிலும் கரன்சி நோட்டுக்கள்தான். தங்க நகைகள். வைர நகைகள். 'இவ்வளவு சொத்துக்கும் நீதான் சொந்தக்காரன். எனக்குப் பிறகு நீதான் அனுபவிக்க இருக்கின்றாய். இருந்தாலும், இரண்டு மாதம் கழித்து, உன் விருப்பம் போல் செய்யலாம், நடந்து கொள்ளலாம்' என்றார். 'அப்படியே செய்கிறேன் அப்பா' என்று தலையசைத்துக் காட்டினான். 'இவ்வளவு பணத்தையும் சந்தோஷமாக செலவு செய்யலாம். விரும்பிய பொருட்களை விரும்பிய நேரத்தில் பெறலாம். வேண்டிய இடங்களுக்குப் போய் வரலாம். நினைத்ததை நடத்திக் கொள்ளலாம். கட்டுப்பாடு இல்லாமல் கத்தை கத்தையாக நோட்டுக்களை எடுத்துக் கொள்ளலாம் என்று தந்தை கூறியதும், மகனின் மனதிலே மகிழ்ச்சிக் கூத்தாடியது. இத்தனை ஆண்டுகளாக, தந்தை கொடுக்கும் சில்லறைப் பணத்தில் தானே காலம் சென்று கொண்டிருந்தது. இனி தானே பணத்தை எடுத்து தண்ணிராய் செலவு செய்யலாம் என்று எண்ணினான். அதற்குள் தந்தை பேசலானார். 'என் செல்வமே! ஒரே ஒரு வேண்டுகோள். நிபந்தனையும் அதுதான். உன்