பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 43 செலவுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பணத்தை எடுப்பதற்குமுன், நீயே சம்பாதித்த ஒரு பத்து ரூபாயை அலமாரியில் போட்டுவிட்டு, பிறகு பணத்தை எடுத்துக் கொள் என்றார். 'இதுதானா நிபந்தனை. நிச்சயம் என்னால் முடியும். அப்படியே செய்கிறேன் அப்பா என்று வாக்குறுதியளித் தான். - தந்தை இறந்த பிறகு, அவர்க்குரிய கடன்களையும் முடித்தாயிற்று, நாட்கள் பல கழிந்தன. இளைஞனாகிய செல்வனின் எண்ணம், பணம் பற்றியே எண்ணலாயிற்று. இனி தடையில்லை அல்லவா! அலமாரியைத் திறந்துபார்த்தான். அப்பப்பா! எவ்வளவு நோட்டுக்கள்! எப்படி குவிந்து கிடக்கின்றன! 'இனி இந்த நோட்டுக்கள் நம்முடைய சந்தோஷத்தின் தூதுவர்களாக மாறப்போகின்றன என்று எண்ணியதும், அவனது மனம் சலனத்திற்கும் சபலத்திற்கும் அடிமை பட்டுப் போய் விட்டது. 'ஒரு நாளைக்கு ஒரு பத்து ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வருவது முடியாதா? அதற்குப் பிறகு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போகப் போகிறேன் என்று பேசி முடிவு செய்து கொண்டான். கத்தை கத்தையாகக் காட்சியளித்த நோட்டுக்கள். அவனது ஆசைக் கனவுகளை உசுப்பி விட்டுக் கொண்டு இருந்தன. ஆசை மிகுதியால் இவனும் பணம் சம்பாதிக்கப் புறப்பட்டு விட்டான். -