பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒவ்வொரு நாளும் ஊரில் ஒவ்வொரு பக்கமாகச் சென்றான். என்ன வேலை செய்யவேண்டும் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. யாரிடம் போய் வேலை கேட்க வேண்டும் என்பதும் புரியவில்லை. வசதி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன் அல்லவா! உழைக்காமலே உண்டு உறங்கி, காலம் போக்கியவன் அல்லவா! அதனால்தான் ஒன்றும் புரியவில்லை. எதையாவது செய்து எப்படியாவது பத்து ரூபாய் சம்பாதித்து விட்டால், ஒரே சமயத்தில் வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டான். வியாபார நுணுக்கம் தெரிய வேண்டுமே, என்ன வேலை செய்தால் இத்தனை ரூபாய் கிடைக்கும் என்பதாவது தெரிய வேண்டாமா? அவன் கால் கடுக்கக் காத்திருந்து, கால் வலிக்க அலைந்து திரிந்ததுதான் மீதியாயிற்று. சொகுசாக இருந்து சம்பாதிக்கும் வழிவகைகள் எதுவும் தெரியவில்லை. ஒரு நாள் கூலியாகப் பெட்டி சுமந்து பார்த்தான். மற்றொரு நாள் மண் வண்டியில் மண் கூடை தூக்கிப் பார்த்தான். இன்னொரு நாள். வேகாத வெயிலில் நின்று விற்பனைக்கு உதவியாளராக நின்று பார்த்தான். இப்படியாக அந்த நான்கு நாட்களிலும் நாளைக்கு ஒரு ரூபாய்தான் சம்பாதிக்க முடிந்தது. இப்படியாக பல நாட்கள் ஆயின. அதற்குள் அவனது மேனி கருத்தது. முக அழகு மாறுபட்டுப் போனது. மேலெல்லாம் பயங்கர வலி,