பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 47 10. சொர்க்கமும் நரகமும் சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? எப்படி இருக்கும்? ஓயாமல் இப்படி தனக்குத்தானே கேள்விக் கேட்டுத் தன்னையும் குழப்பிக் கொண்டு, எதிரில் உள்ளவர்களையும் இடர்ப்படுத்திக் கொண்டு வந்த ஒருவனுக்கு, சொர்க்கத்தையும் நரகத்தையும் போய் பார்க்கின்ற அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது. சொர்க்கத்தையும் நரகத்தையும் போய் பார்ப்பதா வது? என்ன கதை விடுகிறீர்களா என்று நீங்கள் கேட்பது எனக்குக் காதில் விழுகிறது. கதைதான். கொஞ்சம் கற்பனை. பழுதில்லாமல் கொஞ்சம் பொய். அவ்வளவு தான். இனிமேல் நீங்கள் கதையை தொடரலாம். வாய்ப்புக் கிடைத்த அந்த மனிதன் முதலில் நரகத்தைத் தான் போய் பார்ப்பேன் என்று அடம் பிடிக்கிறான். ஆகா! வாருங்கள் என்று வழி அனுப்பி வைக்க அவனும் நரகம் போய் சேர்ந்தான். சிரமம் எதுவுமில்லாமல், நரகத்திற்குப் போவது என்றால் அவ்வளவு கஷ்டமா என்ன? -- ஆசைப்பட்டவன் விரும்பிய இடமெல்லாம் சென்று பார்க்க அனுமதிக்கப்படுகிறான். ஆர்வத்தோடு அவன் அங்கும் இங்கும் போய் பார்க்கிறான். நரகம் என்றால் எப்படி எப்படியெல்லாம் வருணிப்பார்கள்? இங்கே என்னவென்றால், சிறந்த நகரம் ஒன்றில், சிறப்பான வசதிகள் எல்லாம் குவிந்து கிடப்பது போலல்லவா தெரிகிறது? என்ன நகரம் இது?