பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா குறைகள் எதுவும் இல்லையே! ஆடம்பரப் பொருட்கள், அழகு அணிமனிகள், அருமையான காட்சிகள், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே சாப்பிடும் அறைக்குள் நுழைகிறான். அங்கே அறு சுவை உணவு வகைகள். அலங்காரம் செய்யப்பட்ட மேஜைகள் மீது, கண்களைப் பறிக்கும் பாத்திரங்களில் வைக்கப் பட்டிருக்கின்றன. சாப்பிடும் நேரம் போலும்! நரக வாசிகள் எல்லோரும் சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்திருக் கின்றனர். அவர்களும் மனிதர்களைப் போலவே தான் இருக்கின்றனர். எந்தவிதமான மாற்றமும் இல்லாமலேயே நரகத்திற்கு வந்து, இவ்வளவு வசதிகளையும் அடைகின்றார்களே என்று அவன் எண்ணி பெருமூச்சு விடும் பொழுது, ஒருவன் அசைவதைப் பார்க்கிறான். ஓகோ மனிதனுக்கும் இவனுக்கும் ஒரே ஒரு மாற்றம்தான் இருக்கிறது. சாதாரணமாக மனிதனுக்கு உள்ள கையின் நீளத்தை விட இரண்டு மடங்குகளாக அல்லவா கை நீட்டப்பட்டிருக்கிறது? ஏன் இப்படி கை நீளமாக இருக்கிறது? -- அவன் கண்ணைமூடிக் கொண்டு யோசித்தான். சாப்பிடலாம் என்பதற்கு அறிகுறியாக மணி ஒலிக்கிறது. உணவுத் தட்டுக்களின் முன்னே உட்கார்ந்திருப்பவர்கள். ஆர்வத்துடன் உணவை கையில் அள்ளுகின்றனர். வாய்க்குள் போடுவதற்கு முயல்கின்றனர். ஐயோ பாவம்! கை நீளமாக இருப்பதால், வாய்க்கு நேராக வருவதற்கு ஏற்ப கை மடங்க மாட்டேன் என்கிறது.