பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 51 கதைதான். மனிதனோ தான் வாழும் சமுதாயத்தில் ஓர் அங்கம். அவனை, கூடி வாழும் மிருகம் என்றுதான் கூறுகின்றார்கள். தனித்து யாராலும் இன்றைய சூழ்நிலையில் வாழவே முடியாது. ஒருவர்க்கொருவர் உதவி செய்துதான், கூடி சேர்ந்து தான் வாழமுடியும். ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு, மனம் விட்டுப் பழகி, விட்டுக் கொடுத்து, பொறுமை காட்டி, பண்புகள் சூழ வாழும் பொழுதுதான் ஒருவர் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கிறது. 'நானே நானே' என்று நாதசுரம் வாசிப்பவ்ர்கள், தற்பெருமை கொண்டு தருக்கித் திரிபவர்கள், சுயநலமிகள் வாழ்க்கை நரகமாகவே அமைந்து விடுகிறது. சேர்ந்து வாழும் சிறந்த பண்பு, ஒருவர்க்கொருவர் உதவி வாழும் உன்னத குணம், பலருடன் பழகி பக்குவமாக சேர்ந்து வாழும் பண்பான மனம், மற்றவர்களையும் மதிக்கின்ற உயர்வான எண்ணம், ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு என்பதை நேரடியாக செயல் மூலம் செயல்படும் அற்புத வாய்ப்பு எல்லாவற்றையும் தருகின்ற ஒரே இடமாக அல்லவா விளையாட்டுக்கள் இருக்கின்றன. - ஒருவன் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றி விடும் பண்புகளைத் தரும் விளையாட்டுக்களில், பங்கு பெற்றுப் பார்த்தால் தான் என்ன என்று பலர் யோசிப்பதும் புரிகிறது. ஆமாம்! காற்று, நீர், வெப்பம், போன்ற இயற்கை அன்னையின் வரப் பிரசாதம் போலவே, விளையாட்டுக்களும் விளங்குகின்றன. விளையாட்டைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக நீங்களும் அமைத்துக் கொள்ளலாம் அல்லவா!