பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 11. கா... கா. கத்திரிக்கா இது ஒரு ராஜா I্যান্তেীি கதையல்ல. இது ஒரு ராஜா மந்திரி கதை, காரசாரமாக இல்லாது போனாலும், கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். அவ்வளவுதான். 'மந்திரி நமது மாநகர் தன்னிலே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என்று மன்னர் கேட்பாராம். மழை பெய்யாவிட்டாலும், பெய்கிறது பெய்கிறது என்று மந்திரி பதில் கூறுவாராம். மன்னர் மகிழ்ந்து, வேறு பல கேள்விகளைக் கேட்டு திருப்தியடைந்தவாறு, ராஜ பரிபாலனம் செய்து விட்டு அந்தப்புரத்திற்குள் போய் விடுவாராம். அப்படிப்பட்ட ராஜாக்களில் ஒருவர் தான் நமது கதாநாயகனும். நமது ராஜா இருக்கிறாரே, அவர் ஒரு போஜனப் பிரியர். அறு சுவை உணவு வகைகளை தன்னுடைய திருப்திக்கு ஏற்றவாறு சமைக்கச் செய்து, ஜமாய்த்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே. அவரது உண்ணும் மேசையில், அதிகமாக இடம் பெறும் உணவு வகை கத்திரிக்காய் தான். அவியல், பொரியல், மசியல், வருவல், சாம்பார் என்பதாக அத்தனை அயிட்டங்களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருப்பது கத்திரிக்காய்தான். ஒரு நாள் மன்னர் உணவு உட்கொள்ளும் பொழுது, மந்திரியாரும் உடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.