பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா -- 53 கத்தரிக்காய் பண்டங்களாக மேசையில் உள்ள பாத்திரங்கள் காட்சியளிப்பதையும், மன்னர் மகிழ்ச்சிப் பெருக்குடன் சாப்பாட்டுப் போர் நடத்திக் கொண்டிருப்பதையும் மந்திரி, ஒருவித 'தமாஷ கலந்த பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தார். மன்னர் இதைப் பார்த்து விட்டார். 'மந்திரி! இந்த கத்திரிக்காய் என்றாலே எனக்கு உயிர் இது இல்லாமல் ஒரு வாய் உணவு கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு விட்டார் மன்னர் பெருமான். மன்னருக்குப் பிடிக்கிறது என்று தெரிந்த பிறகு, மந்திரி அதற்கு மாற்றம் சொன்னால், பிழைப்பாரா? அல்லது மன்னர்தான் பொறுப் பாரா? மந்திரிக்கு இதெல்லாம் தெரியாத சங்கதியா? கத்திரிக்காய் கரப்பான், சொறி சிரங்குகளை சொகுசாக அழைக்கும் சாமார்த்தியம் அதற்கு நிறைய உண்டு என்பதை அமைச்சர் அறியாதவரா? இருந்தாலும் அரசர் கேட்ட கேள்விக்கு அழகான பதில் ஒன்றை அளித்தார். சாமியிலே மாரியம்மனும், காய்களிலே கத்தரிக்காயும் சகலருக்கும் பொதுவான ஒன்றாகும். எல்லா மதத்தினரும் மாரியாத்தாவை நினைத்துப் போற்றிப் பூசிப்பது போலவே, எல்லா வகை உணவு உண்ணுபவர்களும் கத்தரிக்காயை சைவரும் அசைவரும் போற்றி ஏற்றுக் கொண்டு உண்கின்றார்கள்.