பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதுவுமின்றி, கத்தரிக்காயைப் பாருங்கள். அதன் அமைப்பே அற்புதம்தான்! காய்களுக்கெல்லாம் அதுதான் அரசன். அதாவது, அதன் தலையிலே மகுடம் போல ஒரு அமைப்பு. கிரீடத்திலே குஞ்சம் தொங்குவது போல கீர்த்தியான படைப்பு. ஆண்டவனே அப்படி ஒரு அதிசயமான தோற்றத்தைப் படைத்திருக்கிறான். அதை நீங்கள் விரும்பி உண்பதுதான் நியாயம்' என்றார் அமைச்சர். மன்னர் மனம் மகிழ்ந்து போனார். மந்திரியின் பாராட்டை ஆமோதித்துக் கொண்டார். தன் தேர்வு' பற்றி தற்பெருமையும் அடைந்தார். அன்று முதல், கத்திரிக்காய் அதிக அளவில் அரசர் உணவில் இடம் பிடித்துக் கொண்டது. பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், மன்னர் உணவு உட்கொள்ளும் போது, மந்திரி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மந்திரி அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தது. காரணம், கத்திரிக்காய் வகையறாக்கள் ஒன்று கூட அங்கு இல்லை. மன்னர் முகத்தைப் பார்த்தார் மந்திரி, மன்னர் நோய்க்கு ஆளானவர் போன்ற தோற்றம், நமைச்சல், சொரியல் போன்றவற்றில் ஈடுபட்டவாறே, மன்னர் கத்திரிக்காயை மோசமான காய்' என்பதாகப் பழித்தும் இழித்தும் பேசினார். - 'இனி கத்திரிக்காயே இந்த நாட்டில் இருக்கக் கூடாது பயிர் செய்யவே கூடாது. உடலுக்கு உதவாத காய், என்ன காய் என்று பேசியவுடன் மந்திரி அரசரைப் பார்த்தார்.