பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 12. லொள் ..... லொள் ..... சின்னஞ் சிறு மேடை ஒன்று சிம்மாசனம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றி வண்ண வண்ணக் காகிதத் தோரணங்கள் வான வில் லாய் வளைந்து, நெளிந்து வடிவழகுக் காட்டிக் கொண்டிருந்தன. என்னவோ, எதற்கோ என்று எண்ணங்களை வளைத்து இழுத்துக் கொண்டிருந்தன வழிநெடுக வைத்திருந்த வளைவுகள். பதாதைகள். அவற்றிலே எழுதப்பட்டிருந்த வாசகங்கள், வாசிப்பவர்களை சத்தமிட்டுப் படிக்கும் வகையிலே திட்டமிட்டு எழுதப்பட்டிருந்தன. கண்ணா வா! மன்னா வா! எங்கள் விண்ணே வா! பேசும் விழியே வா! பொன்னே வா! பூம்பொழிலே வா! மின்னார் மேனியனே! எங்கள் மன்மதத் தலைவனே வா வா! என்றெல்லாம் தலைவர் பெருமானின் பெருமைகள், பொறி பறக்கும் வசனங்களால் பூஜிக்கப் பட்டிருந்தன! அதோ! கூப்பிடும் தூர அளவிலே புழுதி மேகம்! பெருங்கூட்டம் வருவது போல தோன்றுகின்றதல்லவா! அலை கடல் போல ஆரவாரம் ஆங்காரமாய் அலறுவது போல ஓங்கார சத்தம்! என்ன ஆச்சரியம்! கூட்டத்தில் உள்ளவர்கள் இரண்டு கால்களால் நடந்து வருவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். அவர்கள் நான்கு கால்களில் அல்லவா நடந்து வருகின்றார்கள்: ஆமாம்! நாய்களார் நடத்தும் நயமான ஊர்வலம்தானே அது!