பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 57 மேடைத் திடலை ஊர்வலம் அடைந்தாகி விட்டது. மேன்மைமிகு தலைவர், அழகு பொழியும் அருமை சிங்காதன இருக்கையில் அமர்ந்திட, தொண்டர்கள் கூட்டம் இடிபிடி யோடு எதிரே வந்து குந்திட, இனிமையான குலைப்புடன் இசை மழை பொழிய, கூட்டம் ஆரம்பமானது. 'அருமைத் தோழர்களே என்று ஆரம்பித்தார் விழா அமைப்பாளர். இன்று நமக்கு நன்னாள், பொன்னாள். நமது இனத்தின் சிறப்புமிக்கத் தலைவர் பல வெளி நாடுகளுக்குப் போய். வெற்றி கரமாக வந்திருக்கும் இனிய நன் னாளைக் கொண்டாடத்தான் நாம் கூடியிருக்கிறோம். ஆகவே, நீங்கள் எல்லாம் உங்கள் கர ஒலி மூலம் தலைவரைப் பாராட்ட வேண்டுகிறோம். என்று வேண்டுகோள் விடுத்தார். ஊளை ஒலி ஊரையே கலக்கி விட்டு ஓய்ந்தது. தலைவர் எழுந்து பேசத் தொடங்கினார். அவரது முகத்திலே கம்பீரம், தற்பெருமை. சோகம் போன்ற நவரசங்களும் நாட்டியமாடிக் கொண்டிருந்தன. பேசத் தொடங்கினார். பேச்சு எழவில்லை. கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். 'என் வெளி நாட்டு அனுபவங்களை உங்கள் முன்னே வைக்க விரும்பு கிறேன் தோழர்களே என்று தொடங்கி விட்டார். பல நாட்டு இயற்கை அழகினைப் படம் பிடித்துக் காட்டினார். ஆறுகள், அருவிகள், மண்டபங்கள், மணிமாடங்கள் எல்லாவற்றையும் சித்தரித்துக் காட்டினார். சேதிகளை எல்லாம் கவிதை மழையாகப் பொழிந்தார்.