பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எல்லா நாட்டினரின் விருந்து உபசாரத்தையும் வாயாரப் புகழ்ந்தார். இப்படி ஒரு வாய்ப்பு இனி எனக்கு எந்தப் பிறவியிலும் கிடைக்காது என்று கை தட்டல்களுக்கிடையே பேசி முடித்து விட்டு, அந்த இடைவேளையில் கோலி சோடாவும் குடித்துக் கொண்டார். பிறகு பேச்சு வரவில்லை. சிறிது நேரம் கூட்டத்திலும் மேடைப் புறத்திலும் மயான அமைதி நிலவியது. தலைவருக்கு என்னவோ நேர்ந்து விட்டது என்று எல்லோரும் தடுமாறித் திகைத்து வேதனையில் கிடந்த பொழுது, மீண்டும் தலைவரின் மணிக்குரலின் சங்கநாதம் ஒலித்தது. இப்பொழுது அந்தக் குரலில் கம்பீரம் இல்லை, கவலையின் கனம் தெரிந்தது. அவரது பேச்சு இப்படி தொடர்ந்தது. 'என் அருமைத் தோழர்களே! என்னை வெளி நாடுகள் அனைத்துக்கும் வழி அனுப்பி வைத்தீர்கள். உங்கள் நல்ல மனதும் வாழ்த்தும் போலவே என் பயணமும் சீரும் சிறப்பாக, சுகமாக சுவையாக அமைந்தது. மனிதர்கள் எல்லோரும் என்னை வர வேற்றனர். வாழ்த்தினர். விருந்தளித்தனர். விழாக்கள் எடுத்தனர். என்னை கெளரவித்தனர். களிப்பூட்டினர். மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற மிருகங்களும் என்னை ஆதரித்துப் பேசின. என் ஆற்றலைப் போற்றின. என் உயர்வை மதித்தன. மனிதர்களும் மற்ற இனத்து மிருகங்களும் என்னை பாராட்டிப் பரிவுடன் நேசித்த