பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கானக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலே தான். இந்தக் கடுமையான சோதனையும் வேதனையும் இராமனுக்கு ஏற்பட்டு விட்டது. அழகிய சீதையின் மேல் ஆசைப்பட்டுப் போன இராவணன் என்னும் இலங்கை மன்னன், இராமன் இல்லாத நேரம் பார்த்து, சீதையை சிறையெடுத்துப் போய் விட்டான். செய்தியறிந்த இராமன் திகைத்தான். திடுக் கிட்டான். சினம் கொண்டான். சீறியெழுந்தான். சிறுமை புரிந்த தீயவனை தீர்த்து தருமத்தைக் காக்க உறுதி கொண்டான். அம்பை எடுத்தான். வில்லை வளைக்கு முன்னே, குறிக்குரிய கொடுங்கோலனைக் கண்டாக வேண்டும்! எங்கே போனான்? எப்படியிருப்பான் அவன்! எவ்வாறு கண்டு பிடிப்பது என்பன போன்ற யோசனைகள் தோன்றிடவே, இராமன் உட் கார்ந்து யோசிக்கும் நிலைமைக்கு உட்படுத்தப்பட்டான். நெடிதுயர்ந்த மரம் ஒன்றின் நிழலில் வேர் இருக்கை ஒன்றில் மெதுவாகப் போய் அமர்ந்து கொண்டான். கையில் எடுத்த அம்பைத் தரையில் ஊன்றிய வண்ணம் சிந்தனை செய்யத் தொடங்கினான். எவ்வளவு நேரம் சிலையாக அமர்ந்திருந்தானோ? எத்தனை நேரம் சிந்தனைப் பிழம்பாக இருந்தானோ அவனுக்கே தெரியாது! திடீரென நிமிர்ந்தான் இராமன். வெந்தனலாகக் கனிந்த துன்பத்திற்கு வேறு வழி கண்டுவிட்ட வன்