பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 63 போல நிமிர்ந்தான் இராமன். அம்பினை எடுத்து, தனது முதுகுப் புறம் உள்ள அம்புறாத் தூணியில் செருக நினைத்தான். தரையில் ஊன்றியிருந்த அம்பின் நுனியிலே இரத்தத் துளி. இரத்தம் அதில் எப்படி வந்திருக்கும்? தரையில்தானே ஊன்றியிருந்தோம்? தவறு ஏதோ நடந்து விட்டது என்று தடுமாற்றம் அடைந்த ராமன், கீழே குனிந்து பார்த்த பொழுது முதுகில் இரத்த ஊற்றுடன் தவளை ஒன்று படுத்துக்கிடந்தது. * தவறுதலாகதவளையின் முதுகின்மேல் அம்பினை ஊன்றி, அழுத்தியவாறே சிந்தனை செய்திருக்கிறோம். இந்தத் தவளையும் வாய்த் திறவாமல் வலியைப் பொறுத்துக் கொண்டு கிடந்திருக்கிறதே என்று உணர்ந்து கொண்ட இராமன், தவளையைப் பார்த்து அனுதாபத்துடன் கேட்டான். அம்பு முதுகில் அழுத்தியவுடனே ஒரு சத்தம் கொடுத்திருந்தால். இப்படி ஆழமாக அம்பு பாய்ந்திருக்காதே! இரத்தம் இப்படி அதிகமாக சிந்தியிருக்காதே என்றான் இராமன். தனது வலியையும் வேதனையையும் வெளிப்படுத்தி விடாமல், தம் பிடித்துத் தாங்கிக் கொண்டிருந்த தவளை பேசத் தொடங்கியது. 'யாராவது தொந்தரவு செய்தால், அந்த துன்பத்தைத் தாங்க முடியாமல், ராமா, ராமா' என்று அழைத்து ஆறுதல் அடைவோம். இங்கே இராமனே துன்பம் தரும்பொழுது. யாரை அழைத்து அடைக் கலம் புக