பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா முடியும் அதனால்தான். அந்த வேதனையையும் தாங்கிக் கொண்டேன்' என்றது தவளை. இப்படி ஒரு நிகழ்ச்சி இராமாயணக் காவியத்தில் வருவதாகக் கூறுவார்கள் கதாகாலட்சேபம் செய்யும் பெரியோர்கள். தாங்கிக் கொண்ட தவளையின் பக்தி நமக்குப்புரிகிறது. என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இராமன் செய்த தவறும் நமக்குப் புரிகிறது. இராமனுக்குத் தெரிந்திருந்தால், அந்த வேதனைச் சம்பவம் விளைந்திருக்காது. தவளை தன் வாய்த் திறந்து தெரிவித்திருந்தால், அதற்குத் துயரமும் தோன்றியிருக் காது. தொடர்ந்தும் இருக்காது. அந்த அற்புத சக்தி வாய்ந்த தம் பிடித்த தவளையாக நமது உடற் கல்வித் துறையும் ஆசிரியர்களும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்களுடைய கற்பனைக்கே மீதியை விட்டு விடுகிறேன்.