பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 14. ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது! நாகரிகத்தின் நிழல் கூடப் படாத குக் கிராமம். மலைப் பாங்கான பிரதேசத்தில், இரண்டு குன்று களுக்கிடையே உருவாகியிருந்த கிராமம் அது. 65 உழைப்பே உலகம் என்று நம்பி வாழும் மக்கள். ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து அன்பு காட்டியும், வம்பு வந்த காலத்துவசைமொழிகள் பேசியும். காலப் போக்கில் மறந்து, மீண்டும் கலகலப்பு ஊட்டிக் கொண்டும் வாழும் குடி மக்களைக் கொண்ட கிராமம் அது. நான்கு ஐந்து மைல்கள் தூரத்தில் ஒரு பள்ளிக்கூடம். அங்கே போய்த் தான் குழந்தைகள் படிக்க வேண்டும். படிப்பில் நாட்டம் உள்ள குழந்தைகள், நடைக்குப் பயந்து போய் பாதியிலே படிப்பை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்குப் போய்விடுவார்கள். 韋 எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்ற வெறியுள்ள, விவேகமுள்ள ஒரு சில குழந்தைகள் தான், பள்ளிக்குப் போய் படிப்பை முடித்துக் கொண்டார்கள். அப்படி படிப்பை முடித்து வெளியூர் போய் வெளியே பெரிய வேலைகளில் அமர்ந்தவர்களும் உண்டு. அங்கே மாரியம்மன் திருவிழா தொடங்கிட இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தன. கிராமமே விழாக் கோலம் கொண்டிருந்தது. வெளியூரிலிருந்து ஏறத்தாழ எல்லா உள்ளுர் வாசிகளும் வந்திருந்தனர். அவரவர்கள்