பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 75 மனித குலத்திற்குத் தேவை என்று உலகமே ஒத்துக் கொண்டு, உடன்பட்டு, பின் பற்றிச் சென்று பெருமை சேர்த்த நாடுகளை, உலகத்திற்கு உச்ச நிலைக்கு உயர்த்திச் சென்ற கல்வி அது! அதனை நாம் உதாசீனம் செய்கிறோம். 'உடற் கல்வியை வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் விரும்பவில்லை - விருப்பமில்லை’ என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம் நாம்! அதனால் என்ன? வாழ்க்கை நடக்க வில்லையா என்று வாய் கூசாமல் கூறுகிறோம். வம்பு பேசுகிறோம். வாதாடுகிறோம். அதனால் என்ன? இன்று வழிமாறிப் போயிருக்கிறோம். இளம் குழந்தைகளுக்கு நிற்க, நிமிர்ந்து நிற்க, நிமிர்ந்து நடக்கக்கூடக் கற்றுத்தராத சூழ்நிலையைக் கொடுத்திருக்கிறோம். ஆமாம்! கெடுத்திருக்கிறோம். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்று மார்தட்டிப் பேசுகிறோம். மயங்கும் சொற்களை அள்ளி வீசுகிறோம். பிறகு? பள்ளிப் படிப்பிலே ஏட்டுக் கல்வி இருக்கிறது. அதற்கு மேலே பொது அறிவு வேண்டும். மாணவர்களுக்கு இயற்கையான உடல் நலம் உண்டு.