பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதற்கு மேலும் உடல் திறம் வேண்டும். பொது அறிவை வளர்க்க நூலகங்கள் வேண்டும். அதுபோல உடல் வளத்தைப் பெருக்க உடற் கல்வித் துறை வேண்டும். இது இரண்டும் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகின்றன. குழந்தைகளுக்கு முழு வளர்ச்சியைத் தருகின்ற பொது அறிவையும் பொது உடல் வளத்தையும் தர நாம் மறந்து விட்டோம். அல்ல அல்ல. மறைத்து விட்டோம். ஆனால், படிப்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக, வல்லவர்களாக வர வேண்டும் என்று மட்டும் விரும்புகிறோம். அடிப்படையான உடல் வளமாகிய அகரத்தை மறந்து விட்டோம். - தங்கப்பதக்கம் வாங்கும் ஆசையென்னும் சிகரத்தில் நிற்க விரும்புகிறோம். முகத்திற்குள் கண்கள் போல, வாழ் வின் சுகத்திற்குக் கண்கள் போன்று இருக்கின்ற உடற்கல்வித் துறையையும் நூலகத் துறையையும் ஏன் மறந்தே போனோம்? அதற்காக அதிக முன்னேற்றம் காண ஏன் மறந்து போனோம் என்பதுதான் புரியவில்லை. இன்னும் காலம் கடந்து விடவில்லை. இன்றே எண்ணி, நன்றாக செயல்பட்டாலும், நம் தமிழகம் முன்னணிக்கு வந்து விடும். அகரத்தை - அடிப்படையை நினைப்போம் - சிகரத்தில் வீற்றிருப்போம்!