பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 77 17. தண்ணிரும் தெய்வமும் குருநாதரின் முகத்தையே குறுகுறு வென்று பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சீடன். தான் கேட்ட கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், அவனை விடா முயற்சியுள்ளவனாக மாற்றிக் கொண்டிருந்தது. குருவின் திருவிழிகள் தன் மீது படாதா என்று ஏங்கிய சீடனின் ஏக்கத்தை மேலும் தாக்குவது போல தியானத்தில் அமர்ந்திருந்தார் குருநாதர். பொறுமையிழந்தவனாக, ஆனால் காரியம் சாதிப்பவனாக குருநாதரின் காலடியிலே அமர்ந்திருந்தான் அந்த சீடன். - கண் விழித்த குருநாதரின் கடைக்கண் கடாட்சம் அவன் மீது பட்டது. களிப் பின் எல்லைக்கே போய்விட்டான் சீடன். குருநாதா என்னை தெளிவு படுத்துங்கள். தீராத வேட்கையின் தணலில் தீய்ந்து கொண்டிருக்கிறேன்! 'மயங்காதே மகனே! உனக்கு காலம் தான் பதில் சொல்லும். காலத்திற்காக காத்திரு என்றார் குருநாதர். 'கடவுளை நான் காணவேண்டும்! காலத்திற்காக காத்திருக்க முடியவில்லை. நீங்கள் காட்டுகின்ற பாதையில் தான் துணிந்து நடக்க விரும்புகிறேன்!” கடவுள் எங்கும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். தணலிலும் இருக்கிறார். தண்ணிரிலும் இருக்கிறார். தேடித் திரிய வேண்டாம் மகனே! அவரே உன்னைத் தேடி வருவார் என்று பேசி, சீடனை திருப்திப் படுத்தப் பார்த்தார் குருநாதர்.