பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 81 அவனுடைய நினைவுக்கு வந்தது. ஆகவே, காலம் தாழ்த்தாமல் கடலை நோக்கிப் புறப்பட்டான்." கடுகிவந்த அவனை கடல் வரவேற்றது. பெருகி வந்த பெருமூச்சை நிதானமாக விட்டபடி, தான் நினைத்து வந்த சேதியை, நன்கு சிந்தித்து, ஒரு முடிவெடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் சீடன். கரை தெரியாத, ஒரு கட்டுக்கடங்காத, முதலும் முடிவும் இல்லாத, யாருக்கும் அடிமையாகாத, ஒரு சுதந்திர இயக்கத்தில் நிரந்தரமாக இருக்கும் இந்நீரல்லவோ தெய்வம். அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆகவே, தைரியமாக இந்தத் தண்ணிரை தெய்வம் என்று அழைக்கலாம். என்று முன் யோசனையுடன் முடிவெடுத்து, கடல் நீரை அழைத்தான். கடல் நீரின் பதில் அவனை திகைக்க வைத்தது. 'உன்னுடைய சிந்தனை சரிதான். எனக்கு முதலும் முடிவும் இல்லை. தொடக்கமும் முடக்கமும் இல்லை. ஒருகரை தெரிந்தால் எதிர் கரை தெரியாது. ஆனால், என்னைப் போய் தெய்வம் என்று சொல்ல. உன் மனம் எப்படி துணிந்தது! நான் தெய்வத்தின் ஒரு கூறுதான். அது சிந்திய கருனைதான் நான். தெய்வம் என்பது உன்னைத் தேடி வருவது. நீ தேடி அலைந்தால் உன் கைக்கு அகப்படாது. அதுவும் சுகப்படாது. ஆகவே, எது தெய்வம், எப்பொழுது தெய்வம் என்பதை நீ தேடினால் தெரிந்து கொள்ள முடியாது. உன்னைத்தேடி வரும் பொழுது. நீ புரிந்து கொள்வாய் என்று தத்துவம் பேசிய வித்தகத்தில் தாவித் தாவிக் குதித்து அலையாய் புரண்டது கடல்.