பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒடுங் கிப் போனான் சீடன் உள்ளம் ஒடிந்தும் உடைந்தும் போனதுதான் காரணம். இனி என்ன செய்வது? கடலே கையை விரித்து விட்டது அவனுக்கு பெரிய கவலையாகப் போய்விட்டது. உலகத்தின் முக்கால்பகுதியை விழுங்கி சம்காரம் செய்து கொண்டிருக்கும் கடலே தன்னை தெய்வமில்லை என்று கழற்றிக் கொண்டு விட்டபிறகு, தெய்வத்தை எப்படிப் பார்ப்பது? தெரிந்து கொள்வது? எப்பொழுது தெய்வம் என்னைத் தேடிவரும்? அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? இந்தச் சிந்தனைகள் அவனை சித்ரவதை செய்து கொண்டிருந்தன. செய்வது தெரியாமல் சிதைந்துபோய்க் கொண்டிருந்தான். முடிவு சித்தம் போக்கு சிவன் போக்கு என்பார்களே, அதுபோல அவன் மனம் போன போக்கிலே போய்க் கொண்டேயிருந்தான். உச்சிவெயில் உக்ரமமாகக் காய்ந்து கொண்டிருக்கும் நண்பகல் நேரத்தில், பொறி பறக்கும் கடுமணல் பாய் விரித்த பாலைவனத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தான் சீடன். எவ்வளவு வேகமாக நடந்தாலும், எதிரே வெறும் மணற் காடுதான் பரப்பிக்கிடந்ததே தவிர, ஒதுங்கி நிற்க ஒரு மரமோ, சிறு நிழலோ எதுவும் கிடையாது. நின்றால் பாதங்கள் சுடுகின்றன. நடந்தால் பாதங்கள் நோகின்றன. கீழும் மேலும் கடும் அனலால் வேகின்றன. தவித்துப் போனான் சீடன் களைத் துப் போனான். வெள்ளமாக வியர்வை வெளியேறிக் கொண்டிருந்தது. வெளிறிபோய்க் கொண்டிருந்தான் சீடன்.