பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 83 தாகம் அவனை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. நாவோ வரண்டு போய் விட்டது. ஈரம் ஆக்கிக் கொள்ளலாம் என்றாலோ எச்சிலும் வாயில் இல்லை. உலர்ந்து போய்விட்டது. உள்ளும் புறமும் இனி நடக்கமுடியாது என்ற நிலைமாறி. இனிமேல் ஒரு சொட்டு தண்ணிர் இல்லாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது என்ற நிலையில் கீழே விழுந்தான் சீடன். கண்கள் நிலைகுத்திக்கொள்வதுபோல் பிதுங்கிக் கொள்ள தடுமாறிப் புரண்டான். தெய்வத்தைத் தேடித்திரிந்தேன். அந்த முயற்சியால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாமல் அநாதையாக இந்தப் பாலையில் சாகிறேன்! தெய்வமே தெய்வமே என்று மண்ணில் சாய்ந்தான். மேலும் மணலில் சரிந்தான். வெயிலின் வேதனையில் கிடந்தவனைக்கண்டு, கலங்கிப் போனதோ என்னவோ, அந்த வானம் வாட்டத்தால் கருத்தது. கருமேகங்கள் கரும்போர்வை போர்த்தியதுபோல் வந்து சூழ்ந்து கொண்டன. இடி இடித்தது, மின்னல் மின்னியது. திடீரென்று ஒருசில துரல்கள் கண்ணிர்போல் உதிர்ந்தன. வாய் பிளந்து கிடந்த சீடன் வாயில் சில நீர்த்துளிகள் சீடனின் நாவை நனைத்தன. வாய் ஈரம் பெற்றுக் கொண்டது. நாவோ பேசும் அளவுக்கு தெம்பினைப் பெற்றது. தெய்வமே என்னை நீகாப்பாற்றிவிட்டாய்! என்று சீடனின் கைகள் வானை நோக்கி வணங்கின.