பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா தெய்வத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்று குருநாதரைக் குடைந்தெடுத்த போது அவர் கூறிய மொழிகள் சீடன் காதுகளில் இப்போது ஒலித்தன. தேடித்திரிய வேண்டாம் மகனே! அவரே உன்னைத் தேடி வருவார்! ஆமாம்! தெய்வம் தண்ணிர் வடிவத்தில் ஓடி வந்து. என்னைக் காப்பாற்றி விட்டது. சீடன் சிந்தை தெளிந்தது. உள்ளமும் உணர்வுகளும் உவகையில் கலந்து கூத்தாடின. தண்ணிர் மட்டுமா தெய்வம்! பஞ்ச பூதங்கள் அனைத்தும் தெய்வம் என்றுதானே எல்லோரும் நம்புகின்றார்கள். நீர், நெருப்பு, நிலம், காற்று எல்லாமே தெய்வங்கள் என்றுதானே வணங்குகின்றார்கள். விழா எடுக்கின்றார்கள்! இயற்கையாக, இலவசமாகக் கிடைப்பது என்று பஞ்ச பூதங்களையும் நாம் நினைத்து மகிழ்ந்தால், அதே போல் இயற்கையாக எழும் உணர்வுகளுக்கு ಣ இலவசமாகக் கிடைப்பது விளையாட்டும் அல்லவா. தேடிப்போனால் தான் தெம்பும் சிறப்பும், செழிப்பும் ஊட்டும் என்பதில்லை. தேடிவந்தும் திரவியமாக உதவுவது விளையாட்டுக்கள் அல்லவா! அவற்றை நாம் ஏன் எதிர்க்கிறோம்? ஏன் உதாசீனப் படுத்துகிறோம்! ஏன் வெறுத்து ஒதுக்குகிறோம்! விதண்டா வாதங்கள் பேசுகிறோம்! தெய்வமாகத் தண்ணிரை நினைக்காவிட்டாலும் தேவைகளைத் தீர்த்து சுகப்படுத்துகின்றது என்று நாம் அதனை வாழ்த்தவில்லையா! வணங்கவில்லையா