பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 85 அதுபோல, உற்றுழி உதவும் விளையாட்டுகளை ஏன் நாம் ஏற்கக் கூடாது! தெளிவடையாத சீடன்போல்தான், விளையாட் டைப் பொறுத்தவரையிலும் பெரும்பாலான மக்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். வாழ்வில் வளம் சேர்க்க மட்டுமல்ல, வழிநடைப் பயணத்திலும் மலர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டக்கூடிய உன்னதத் துணையாக அல்லவா விளையாட்டுக்கள் விளங்குகின்றன: தெரிந்த துணையாக, தெய்வாம்சமாக விளையாடும் விளையாட்டுக்கள் ஓடிவந்து உதவுகின்றன. தேவை யென்று ஏற்றுக்கொண்டோர். திகைப்படையாமல் பெற்றுக்கொண்டோர். தெய்வம்போல் மனமார ஒப்புக் கொண்டோர் அனைவரும், மற்றவர்களைவிட, மனம் போல் வாழ்வு, வாழ்ந்து மகிழ்கின்றார்கள். தெளிந்த சிந்தனை பெற்ற சீடனைப் போல, மக்கள் மாறும் காலம் வரும் என்பது மட்டும் தெரிந்த உண்மைதான். அது எப்பொழுது என்பதில்தான் அவகாசம் இருக்கிறதே தவர, நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் குறையாமல் நிறைந்து கொண்டே போகிறது. காலத்திற்காகக் காத்திருப்போம், ஓடிவந்து உதவாமலா போகப் போகிறது: