பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 18. ஒட்டமும் விளையாட்டும் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று எல்லோராலுமே பாராட்டப் பெற்ற மகாகவி பாரதி. புகாத துறைகள் இல்லை; பாடாத பொருள்கள் இல்லை. வேதாந்தத் துறையையும் தொட்டான். விஞ்ஞானத் துறைகளையும் சொன்னான். அதுபோலவே விளை யாட்டுத் துறையிலும், விம்மிதம் நிறைந்த கருத்துக்களை, மிகமிக விளக்கமாகச் சொன்னான். அத்தனை பாட்டுக்களிலும் அற்புதமான பாடல் ஒன்று. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை கொண்டாடி மகிழும் பாட்டு அது. சொல்லும்போதே உள்ளத்தில் பதிகின்ற எளிமை. உணர்வுடன் கலக்கின்ற இனிமை... சொல்லி மகிழ்ந்து துள்ளி ஓடச் செய்யும் வலிமை கொண்ட வரிகள்தான் அவை. ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தையை வையாதே பாப்பா! மேலே காணும், நான்கு வரிகளைப் படிக்கும் பொழுது மேலோட்டமாக, நீரில் மிதக்கும் கப்பலைப் போல நிமிர்ந்து நின்று கவர்ச்சித் தோற்றம் அளிக்கும் கருத்துக்கள். நீருக்குள் அமிழ்ந்து இருந்து, கப்பலைத் தாங்கி நிற்கும் அடித்தளப் பொருட்கள் போல, ஒவ்வொரு சொல்லும் அற்புதமான அறிவியல்