பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா காலம் இருக்கிறது. அதைக் கண்டு மகிழ அன்புப் பெற்றோர்கள். பாராட்டும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் விளையாடு பாப்பா என்றான் பாரதி. விளையாட்டை இரு வகையாகப் பிரிப்பார்கள் வல்லுநர்கள். உடலியக்க விளையாட்டு. மூளை இயக்க விளையாட்டு - என்ற இரு வகையில், சதுரங்கம், கேரம், சீட்டாடுதல் போன்றவை உட்கார்ந்து, மூளைத் திறனை இயக்கி ஆடக்கூடிய ஆட்டங்களாகும். மற்ற விளையாட்டுக்கள் ஏறத்தாழ எல்லாமே உடலியக்க விளையாட்டுக்களாகும். உடலியக்க விளையாட்டுக்கள்தான் குழந்தை களுக்கு ஏற்றவை என்று, உணர்ந்த பாரதி, ஓடி விளையாடு என்று அறிவுரை கூறுகிறான். ஏனென்றால் ஓடுவதில் உள்ள சுகமும் நலமும். வேறெந்த மருந்திலோ மாயத்திலோ கிடைக்காது என்பதை உணர்ந்திருந்தான் போலும். ஓடுவதை விரைவாக ஓடுதல் என்றும், மெதுவாக ஓடுதல் என்றும் நாம் பிரிக்கலாம். விரைவாக ஒட்டம் என்பதை Running என்கிறோம். மெதுவாக அதாவது நடப்பது போல ஓடுகின்ற நடை ஓட்டத்தை logging என்கிறோம். 6) J 6TTLD T 5 வாழ நடை ஓட்டம் வேண்டும். வளத்துடன் நீடுழி வாழ ஒருவர் ஓடித்தான் பெற ^రి - - - - ^e + - o வேண்டும்! என்கிறார் மேல் நாட்டறிஞர் ஒருவர்.