பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 89 ஓட்டமானது உடலிலுள்ள கலோரி சத்துக்களை உண்டு விடுகிறது. அதனால் உடல் விசை பெற்று விளங்குகிறது. இதயம், நூரையீரல் ஏற்றமுடன் செயல்படத் தூண்டுகிறது. இரத்தம் விரைவோட்டம் பெறுகிறது. இதயத் துடிப்பின் சக்தி பெருகுகிறது. உடல் வெப்பத்தை உண்டு பண்ணி வியர்வையை வடித்து. கழிவுப் பொருட்களை விரைவாக வெளியேற்றி, உடலை சீர்படுத்துகிறது. செப்பனிடுகிறது. செழுமைப் படுத்துகிறது. அதனால்தான், துள்ளிக் குதிக்கும் பிராயத்தில் ஓடி விளையாடு என்றான் பாரதி. உட்கார்ந்து விளையாட ஒருகாலம் இருக்கிறது. உண்மையான வாழ்வு வாழ ஓடித்தான் விளையாட வேண்டும். அதிலே தான் உன் உயர்ந்த எதிர்காலம் உரம் பாய்ந்து கிடக்கிறது என்கிறான் பாரதி. ஓடி விளையாடிய உடலும் உள்ளமும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். கலகலப்பாகவும் இருக்கும். அந்த அற்புத ஆற்றல் நிலையை அரிய காரியங்களுக்கும், உரிய உதவிகளுக்கும் பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும். ஆனால், ஒன்றுமே செய்யாமல், செயல்படாமல் ஓய்ந்திருந்தால் என்ன ஆகும்? 'சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற் சாலை என் பார்கள். அப்படித்தான் ஆகும். - தேங்கிய நீர் தூய்மையிழப்பதுடன், தீய கிருமிகள் தோன்றவும், தீமைகளை, விளைவிக்கும் குளமாகவும் போய் விடுகிறது. ஆனால் ஓடுகின்ற நீரோ, سیاست