பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா -- S1 அவ்வாறு கூடி விளையாடும் பொழுது, மொழி, இனம், மதம், சாதி, ஏழ்மை, செல்வத்தன்மை எதுவும் அங்கே எடுபடுவதில்லை. இத்தனை பயன்களையும் கூடி விளையாடும் பொழுது தான் கற்றுக் கொள்ள முடிகிறது. வளர்த்துக் கொள்ள முடிகிறது. இவ்வாறு திறமையைக் காட்டும். தருணத்தில், மோதல் ஏற்படுவதுண்டு. பிரிவும் பிளவும் பகையும் கூட நேர்வதுண்டு. அப்பொழுது, விவேகம் மறைந்து வேகம் கொள்வதும் நெறி முறை பிறழ்ந்து வெறி கொள்வதும், இயற்கை தானே! ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு. ஆணவம் அன்புக்கு எதிரி என்கிற கொள்கையை அறிந்து, கோபப்படும் பொழுது பொறுமை காட்ட வேண்டும், பகைவராக எண்ணாமல், அருள் காட்டி அன்பு காட்ட வேண்டும். குறை காண வேண்டாம். கோபப்படவேண்டாம். கூட விளையாடுபவரை வைது வம்பு செய்ய வேண்டாம். மனம் புண்படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறான் கவிஞன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள், நல்லதோர் சமுதாயம் படைக்கும் இளைஞர்கள் என்றெல்லாம் நாம் கூறுகிறோம். இளமையிலேயே அவர்களை இதத்தோடு பழக்கி விட்டால், பதத்தோடு வளர்த்துவிட்டால், எதிர்காலம் இனிய காலமாகத் தானே இருக்கும்? அதைத்தான் முன்னுணர்வும் மூதறிவும் நிறைந்த கவிஞன். மனம் நெகிழ்ந்து பாடினான். 'இளமையிலேயே குழந்தைகளைப் பிடியுங்கள், பயிற்சி தாருங்கள்' என்று கொள்கையாகப் பேசி,