பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கோட்டைகள் பல கட்டி, காரியங்கள் செய்ய திட்டங்கள் பலதீட்டுகிறோம். அதை அன்றே பாடிவைத்தான் பாரதி. பாலர்கள் படிக்கும் பள்ளிகளிலே அவர்கள் ஒடவும். விளையாடவும், ஓய்ந்திருக்காமல். கூடி விளையாடும் வாய்ப்பை நாம் கொடுத்திருக்கிறோமா என்றால், இல்லை என்றே கூறலாம். பள்ளி இருந்தால் விளையாட இடம் இல்லை; விளையாட இடம் இருந்தால், விளையாட்டு ஆசிரியர்கள் இருந்தால், வேண்டிய விளையாட்டுப் பொருட்கள் இல்லை. அவர்களுக்குள் ஆடி மகிழ கற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் இல்லை என்ற சூழ்நிலைகளையே இன்னும் எங்கும் காண முடிகின்றது. பாரதி பாடிய பாட்டு பொருள் பொதிந்த பாட்டு. சமுதாய எதிர் கால இருள் நீக்கும் பாட்டு. சக்தி நிறைந்த அருள் நிரம்பிய சமுதாயத்தைப் படைக்கும் பாட்டு. நல்ல உடல்களை வளர்ப்பதிலும். நல்ல இனங்களை வளர்ப்பதிலும் நல்ல மனங்களைப் பெறுவதிலும் நாட்டம் கொள்வோம். நாடு உயரும். நல்லமைதி நிலவும். நாடி பல இன்பங்களை எல்லோரும் எப்பொழுதும் பெறலாம். இந்த இனிய இலட்சியம் நோக்கி இன்றே நடை பயில, செயல்பட எல்லோரும் முயல்வோமாக!