பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கற்றுலா - 93 19. நீ - நீர் - நீங்கள் கடல் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பெரியவர். வா தாத்தா போகலாம்! என்று அவரது கையைப் பிடித்து இழுத்தான் அவரது பேரன். பொறுப்பா போகலாம்! நீ இந்த தண்ணிரைப் பார்க்க வில்லையே! என்ன அழகாக இருக்கிறது. ஆடிக் குதிக்கிறது. பார் என்றார் பெரியவர். அழகாக இருந்து என்ன புண் ணியம்! தாகமாயிருக்கிறது என்று வாயிலே தண்ணிரை வைத்தேன். ஒரே உப்பு. சீ உபயோகப்படாத பொருள் என்ன பொருள்? என்று பேரன் தன் வெறுப்பைக் கடலிடம் காட்டினான். தாகத்தைப் போக்கியாக வேண்டுமே என்று தாத்தாவும் புறப்பட்டு விட்டார். கொஞ்ச தூரம் வந்தாகி விட்டது. அங்கே மணற் பரப்பில் ஊற்றைத் தோண்டி, தண்ணிர் எடுத்துக் கொண்டிருந்தார்கள் சிலர். அந்த சிறுவன் ஆவலாக ஓடிப் போய். குடிக்கத் தண்ணிர் கேட்டான். அவர்களும் முகம் சுளிக்காமல் தந்தார்கள். வேகத்தோடு சட்டையெல்லாம் நனைந்து போகும். அளவுக்குத் தாகத்தைத் தீர்த்துக்கொண்டான். இதுவல்லவோ தண்ணிர்! இப்படித்தான் பயன்பட வேண்டும். என்னவோ கடலைப் பார்த்து ஆச்சரியப் பட்டீர்களே தாத்தா? இந்த ஊற்றைப் பார்த்துக் கொஞ்சம் புகழக் கூடாதா? என்றான் சிறுவன்.