பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா - 95 கடலை வெறுத்துப் பேசினாயே! கூவத்திற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் என்றார் அவர்! அய்யய்யோ தாத்தா என்னால் முடியாது. கடலே பரவாயில்லை. காட்சிக்கு அழகு. அலைகளோ ஆனந்தம். வாயிலே ஊற்றிக் கொள்ள வேண்டுமென்று கடல் வற்புறுத்த வில்லையே! கடலுக்கு வக்கீலாகப் பேசினான் பேரன். கடலுக்கு முந்நீர் என்ற பெயர் தெரியுமா உனக்கு? பெரியவர் தன் மனதில் உள்ளதைப் பேச ஆரம்பித்தார். 'ம்' 'ஹலம்' என்றபடி பேரன் தன் தாத்தாவின் முகத்தைப் பார்த்தான். ஆமாம்! ஆற்று நீர் ஊற்று நீர், மழை நீர் மூன்றும் சேர்ந்து தான் கடல் நீராகிறது. காரணம் என்னவோ தெரியவில்லை. அது உப்புநீராகிப் போகிறது. நல்ல நீராகத் தான் பிறந்த இந்த மூன்று நீர் வகையும் கடலோடு சேர்ந்த பிறகு. உப்பு நீராக மாறுகிறது. பிறக்கின்ற குழந்தைகள் பரிசுத்தமாகப் பிறந்து, சமுதாயத்தோடு சேர்வதுபோல. கடல் நீர் ஆவியாக மாறி, மேகமாக அலைந்து, மழையாகப் பொழிந்து மண்ணுக்குள் அடங்கி, ஊற்று நீராக வெளி வரும் பொழுது. உண்ணும் நீராக வருகிறது. சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, சக்தியால் சாகசம் புரிந்து, ஆற்றல்களை வெளிப்படுத்தி, அனுபவத்தால் முன்னேறி, அனைவருக்கும் உதவுகின்ற அறிஞர்கள் போல. - எதிலும் மனத்தை பறிகொடுத்து விட்டு எப்படியும் வாழலாம் என்று இலட்சியக் கணக்கு போட்டு, சந்தை